பாளையங்கோட்டை சிறையில் கைதிகளிடம் திடீர் சோதனை: பின்னணி என்ன?

பாளையங்கோட்டை சிறையில் கைதிகளிடம் திடீர் சோதனை: பின்னணி என்ன?

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் கைதிகளிடம் போலீஸார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் மத்திய சிறை உள்ளது. இங்கு விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இதன் காரணமாக திருட்டுத்தனமாக செல்போன் பயன்படுத்தப்படுகிறதா அல்லது, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து போலீஸார் அவ்வப்போது சோதனை செய்வது வழக்கம். அந்தவகையில் இன்று அந்த சோதனை நடைபெற்றது.

நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில், உதவி ஆணையர் பிரதீப், 6 ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்ட 50 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு தயாரிப்புக்கூடம், கைதிகள் தங்கும் அறை, தொழில் கூடம், மைதானம், விவசாய நிலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆய்வு கடந்த இருமணிநேரங்களுக்கும் மேலாக நடந்துவருகிறது. இதில் இதுவரை எதுவும் சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in