வந்தே பாரத் ரயிலை இயக்கப்போகும் முதல் ரயில் பெண் ஓட்டுநர்!

சுரேகா
சுரேகா வந்தே பாரத் ரயிலை இயக்கப்போகும் முதல் ரயில் பெண் ஓட்டுநர்!

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சுரேகா
சுரேகா

மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாராவை சேர்ந்தவர் சுரேகா யாதவ். அரசு பாலிடெக்னிக்கில் மின்னியல் பொறியியல் பட்டம் முடித்த சுரேகா, முதுகலை பட்டம் பெற கல்லூரி படிப்பைத் தொடர விரும்பினார். ஆனால் இந்திய ரயில்வேயில் பெற்ற ஒரு வேலை வாய்ப்பு இவரது மேற்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 1989-ம் ஆண்டு உதவி ரயில் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார் சுரேகா. 1996-ம் ஆண்டு சரக்கு ரயில் ஓட்டுநராக பணி உயர்வு பெற்ற சுரேகா, 34 ஆண்டுகளாக ரயிலை இயக்கி வருகிறார்.

சுரேகா
சுரேகா

தற்போது, மும்பை-புனே-சோலாப்பூர் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க இருக்கிறார் சுரேகா. இதன் மூலம் வந்தே பாரத் ரயிலை ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் எந்த பெருமையை பெற்றிருக்கிறார். இதற்காக அவர் கடும் பயிற்சிகளை பெற்றிருந்தார். நாடு முழுவதும் தற்போது 1500 பெண் ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுரேகாவின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ‘வந்தே பாரத் – நாரி சக்தியால் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட் ஸ்ரீமதி சுரேகா யாதவ்" என குறிப்பிட்டுள்ளார். 1990-ல் மகாராட்டிரா அரசில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சுரேகாவுக்கு, அஜிங்க்யா, அஜிதேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in