அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் முடிவு: தடைவிதிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்பு படம்

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருந்தது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் முடிவுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.

இந்த வழக்கில், அனைத்து சாதிகளையும் சேர்ந்தவர்களை புதிய அர்ச்சகர்களாக நியமிக்கவோ அல்லது ஏற்கெனவே பணியில் இருக்கும் அர்ச்சகர்களை பணிநீக்கம் செய்யவோ இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சுப்ரமணியன் சுவாமி தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த மனு மீது பதிலளிக்குமாறும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஏற்கெனவே இது தொடர்பாக நிலுவையில் உள்ள ரிட் மனுக்களுடன் சேர்த்து சுப்ரமணியன் சுவாமியின் இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in