‘கழிவு அகற்றும் பணியில் இறப்போருக்கு இனி ரூ.30 லட்சம் இழப்பீடு’ உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கழிவுகளை கையால் அகற்றும் வெறுக்கத்தக்க நடைமுறையை முற்றிலுமாக நிறுத்துமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த பணியில் இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்குமாறும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதரே கையால் அகற்றும் நடைமுறை இந்தியாவில் இன்னும் தொடர்வதில் உச்ச நீதிமன்றம் தனது வேதனையை பதிவு செய்துள்ளது. கையால் கழிவுகளை அகற்றும் பணியில் துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கின் நிறைவில், உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை இன்றைய தினம்(அக்.20) அறிவித்துள்ளது.

கழிவுநீர் தூய்மை செய்யும் மனிதர்கள்
கழிவுநீர் தூய்மை செய்யும் மனிதர்கள்The Hindu

இவை தொடர்பாக, எஸ் ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 14 வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. கழிவகற்றும் பணியில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை தடைசெய்தல் மற்றும் அவர்களுக்கான 2013-ம் ஆண்டின் மறுவாழ்வுச் சட்டத்தை திறம்பட செயல்படுத்துதல் உள்ளிட்டவற்றை உச்ச நீதிமன்ற அமர்வு வலியுறுத்தியது.

இந்தியாவில் இந்த வெறுக்கத்தக்க நடைமுறை தொடர்வதில் கடும் வேதனையை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், கழிவுகளை அகற்றும் பணியில் இறப்போர் வழக்குகளில், அவர்களுக்கான இழப்பீட்டை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தூய்மை பணியில் தொழிலாளர்
தூய்மை பணியில் தொழிலாளர்

மேலும் இந்த பணியில் நிரந்தரமாக ஊனம் அடைவோருக்கான இழப்பீட்டுத் தொகையை 20 லட்ச ரூபாயாகவும், இதர ஊனமுற்றோருக்கு ரூ.10 லட்சத்துக்குக் குறையாமலும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in