
மத்திய அரசின் போக்கால் நீதித்துறையில் ஒழுங்கின்மை ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாட்டின் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு பரிந்துரைத்து வருகிறது. மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைக்கும். இதன் மீது மத்திய அரசு முடிவெடுத்து நியமனம், பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது வழக்கம்.
ஆனால் கொலிஜியம் என்னதான் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தாலும் பெரும்பாலானவற்றின் மீது முடிவெடுக்கவில்லை; அல்லது நிராகரிக்கிறது என்பது உச்ச நீதிமன்றத்தின் கவலையாக உள்ளது. இதனால், அவ்வப்போது மத்திய அரசுக்கும், கொலிஜியத்திற்கும் இடையே கருத்து மோதல் நிலவுகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கொலிஜியம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலிஜியத்தின் பரிந்துரைகளில் சிலரை மட்டும் தேர்வு செய்து நீதிபதிகளாக மத்திய அரசு நியமித்து வருகிறது. இத்தகைய மத்திய அரசின் போக்கால் நீதித்துறையில் ஒழுங்கின்மை ஏற்படும். மத்திய அரசின் இப்போக்கு ஏற்புடையது அல்ல. மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள கொலிஜியத்தின் பரிந்துரைகளை உடனே பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உச்ச நிதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்