மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமனம்!

 நீதிபதி வைத்தியநாதன்
நீதிபதி வைத்தியநாதன்

மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.

மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்த சஞ்சிஜ் பானர்ஜி கடந்த நவம்பர் 1-ந் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

நீதிபதி வைத்தியநாதன்
நீதிபதி வைத்தியநாதன்

கோவையை சேர்ந்த நீதிபதி வைத்தியநாதன், சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பை முடித்த நிலையில், 1986-ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை வழக்கறிஞராக பணியாற்றினார். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நிரந்தரமாக்கப்பட்டார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

மேகாலயா உயர் நீதிமன்றம்
மேகாலயா உயர் நீதிமன்றம்

இந்நிலையில், அவர் மேகாலயா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து, கருத்து கூறியுள்ள கொலிஜியம் குழு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவருக்கு பதவி உயர்வு வழங்க தேவையான தகுதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், அவர் இந்த காலகட்டத்தில் 1,219 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், அதில் 692 தீர்ப்புகள் கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டதாகவும் கொலிஜியம் தெரிவித்துள்ளது. நீதிபதி வைத்தியநாதன் அடுத்த 9 மாதங்கள் மேகாலயா தலைமை நீதிபதியாக இருந்து, அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஓய்வு பெறுவார்.

நீதிபதி வைத்தியநாதன்
நீதிபதி வைத்தியநாதன்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போது, ஆண்கள் - பெண்கள் பயிலும் கிறிஸ்தவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் என்பது பாதுகாப்பு இல்லாதவை என ஒரு சர்ச்சைக்குறிய கருத்தை கூறி பின்னர் திரும்பப் பெற்றார். மனைவிக்கு எதிராக கணவன் வழக்கு தொடர குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற ஏற்பாடு இல்லாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்றும் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார் நீதிபதி வைத்தியநாதன். அதேபோல குடிசை மாற்று வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என உத்தரவிட்டவர் நீதிபதி வைத்தியநாதன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in