பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சுரங்கம், தொழிற்சாலைகள் அமைக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில்  சுரங்கம், தொழிற்சாலைகள் அமைக்க  தடை:  உச்ச நீதிமன்றம் அதிரடி

வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலும் 1 கிலோமீட்டர் அளவுக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் (ESZ) இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தடைசெய்யப்பட்ட இந்த மண்டலத்திற்குள் நிரந்தரக் கட்டமைப்பை அனுமதிக்கக் கூடாது என்றும், தேசிய வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்காவிற்குள் சுரங்கம் தோண்டுவதற்கும் அனுமதி அளிக்கப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போதுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம், 1 கிமீ தூரத்துக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது ஏதேனும் சட்டப்பூர்வ ஆவணம் இதற்காக அதிக எல்லை வேண்டுமென பரிந்துரைத்தாலோ இந்த பரப்பளவு நீட்டிக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in