
நான்கு மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காற்றின் தரக்குறியீடு 450 புள்ளிகளுக்கு மேல் கடந்து அபாயகரமான பிரிவில் உள்ளது. இதையடுத்து, காற்று மாசைக் குறைக்க டெல்லி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அங்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதுதான் காற்று மாசுபாடுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்சு துலியா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் 'பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். காற்று மாசை தடுப்பது நீதிமன்றத்தின் கடமை மட்டுமல்ல, அனைவரது கடமை’’என்று தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்