தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது? - உச்சநீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது? - உச்சநீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. குறுகிய பதவி காலத்துடன் தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிப்பதில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து வருகிறது. மேலும் புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அருண் கோயல் நியமனம் தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது மத்திய அரசு. மேலும், மே 15 முதல் நவம்பர் 18 ம் தேதி வரை தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அதுவரை என்ன செய்தீர்கள் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 18ம் தேதி வழக்கை விசாரிக்க இருந்த நிலையில், அதே நாளில் அருண் கோயலின் பெயரை பிரதமர் பரிந்துரைக்கிறார் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, நவம்பர் 21ம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்றுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in