சிறுமிக்கு பாலியல் தொல்லை: வடிவேலுவுடன் நடித்த நடிகர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வடிவேலுவுடன் நடித்த நடிகர் போக்சோவில் கைது

சினிமா துணை இயக்குநரின் 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை நடிகர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துணை நடிகர் ராஜூ
துணை நடிகர் ராஜூ

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா துணை இயக்குநர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2-ம் வகுப்பு படிக்கும் 6 வயது மகள் உள்ளார். நேற்று மாலை இந்த சிறுமி விளையாடுவதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் சினிமா துணை நடிகர் ராஜூ(49) அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் சினிமா துணை நடிகர் ராஜூவைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ராஜூ மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட துணை நடிகர் ராஜூ. நடிகர் வடிவேலு நடித்த எலி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in