இரவில் கேமராக்களுடன் பைக்கில் வலம் வரும் போலீஸ்: குமரியில் குற்றத்தை தடுக்க காவல்துறை அதிரடி!

இரவில் கேமராக்களுடன் பைக்கில் வலம் வரும் போலீஸ்: குமரியில் குற்றத்தை தடுக்க காவல்துறை அதிரடி!

குற்றங்கள் செய்வோர் இப்போதெல்லாம் தொழில்நுட்பங்களில் கில்லாடிகளாகவும் உள்ளனர். அவர்களை எதிர்கொள்ளும் வகையில் காவல்துறையும் புதிய, புதிய யுத்திகளைக் கையாள்கிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்களின் டூவிலர்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வரும் 24 -ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் தமிழகம் முழுவதுமே களைகட்டியுள்ளது. மக்களின் நுகர்வு திறனும் இந்நேரத்தில் அதிகரித்துள்ளதால் ஜவுளிகடைகள், பட்டாசுகடைகள் உள்பட அனைத்துக் கடைகளிலும் கூட்டம் களைகட்டியுள்ளது. மாநகர வீதிகளிலும் ஜனங்களின் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதை மையமாக வைத்தே திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களும் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையில் மக்களின் பாதுகாப்புக் களத்தில் காவல்துறை உடன் இருக்கும் நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டும்வகையில் குமரி மாவட்ட காவல்துறை ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு ஒன்றை எடுத்துள்ளது. தினசரி இரவுநேர ரோந்து செல்வதற்காகவே குமரிமாவட்டத்தில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகின்றது. இவர்கள் மோட்டார் சைக்கிளில் வலம்வந்து கொண்டே இருப்பார்கள். இப்போது தீபாவளி நேரம் என்பதால் முழுநேரமும் இந்த பிரிவு சுற்றிக்கொண்டே இருப்பார்கள். இது மட்டும் இல்லாமல் இவர்களின் டூவீலர்களில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

கேமராக்களுடன் வலம் வரும் மோட்டார் சைக்கிள் காவலர்களையும், அதில் பதிவாகும் காட்சிகளையும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரி கிரன் பிரசாத், எஸ்.பி அலுவலகத்தில் இருந்தே நேரடியாகக் கண்காணிப்பார். தீபாவளி நேர குற்றங்கள் செய்வோரை இது எளிதில் அடையாளம் காணவைக்கும். மக்களுக்கும் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடிய திருப்தியைக் கொடுக்கும் என்பதால் இத்திட்டம் குமரி மாவட்ட மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in