நம்ப முடியாத தருணம் - சந்திரயான் குறித்து சுந்தர் பிச்சை பெருமிதம்!

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

சந்திரயான் நிலவை தொட்டது நம்ப முடியாத தருணம் என கூகுள் சி..ஐ.ஓ சுந்தர்பிச்சை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக  கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி  சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தே இந்த சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டது.

விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்தது. அதன் பின் நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் நுழைந்த சந்திரயான் 3, பல நாட்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றியது. அதனை நிலவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞானிகள் செலுத்தி வந்தனர். திட்டமிட்டபடி நேற்று மாலை 6.04 மணிக்கு  சந்திரயான் 3 விண்கலம்  வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது. 

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை இந்திய மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.  இந்திய பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள்,  உலக நாடுகளின் தலைவர்களும் இந்தியாவின் இந்த சாதனையை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தவரான கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை இந்த சாதனையைக் கண்டு பெருமிதம் அடைந்துள்ளார். 

இந்த நிகழ்வு குறித்து சமூக வலைதளத்தில் சுந்தர்பிச்சை,  'நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நிகழ்வு நம்ப முடியாத தருணம். இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள்' என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in