வெப்ப அலையால் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை: அரசு அறிவிப்பு

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்த அரசு
நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்த அரசுவெப்ப அலையால் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை: அரசு அறிவிப்பு

ஒடிசாவில் நிலவும் வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு அரசு , தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்லி, மேற்குவங்கம் உள்பட பல மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் தேர்வுக்காலமானாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒடிசாவில் நாளை முதல் (ஏப்.21) பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அர சு உதவிபெறும் பள்ளிகளுக்கு பிளஸ் 2 வரையில் அனைத்து வகுப்புகளுக்கும் நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் ஜூன் 17 அன்று மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஷ் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாளை முதல் கோடை விடுமுறையை அறிவித்துள்ளோம். உண்மையில் மே 4-ம் தேதி முதல் கோடை விடுமுறைக்கு பள்ளிகள் மூடப்படும் என்று திட்டமிடப்பட்டது. இருப்பினும், கடுமையான வெப்பம் மற்றும் முதல்வர் நவீன் பட்நாயக்கின் உத்தரவின் பேரில், நாளை முதல் கோடை விடுமுறையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளோம். பள்ளிகள் ஜூன் 16-ம் தேதி வரை மூடப்பட்டு ஜூன் 17-ம் தேதி மீண்டும் திறக்கப்படும். இருப்பினும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டத்தை நாளை ஏற்பாடு செய்துள்ளோம். எனினும், வெப்பம் காரணமாக மாணவர்களை அழைத்து வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம் ” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in