வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு: எங்கு தெரியுமா?

வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு: எங்கு தெரியுமா?
வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு: எங்கு தெரியுமா? வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு: எங்கு தெரியுமா?

கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு இப்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் இரு கட்டமாகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் மேல்நிலைப் பிரிவுகள் வரும் 5-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகள் 7-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கோடை வெயில் கடுமையாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே ஜூன் மத்திய பகுதிவரை வெப்ப அலையும் நீடிக்கும் என அம்மாநில வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கான கோடை விடுமுறை வரும் 15-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in