பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி: தந்தை, பாட்டி தற்கொலை

பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி:  தந்தை, பாட்டி தற்கொலை

பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியடைந்த தந்தை மற்றும் அவரது தாய் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் முரளி.  இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் இந்துஜா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. பிரசவத்திற்காக இந்துஜா தனது தாய்  வீட்டிற்குச் சென்றார். தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என முரளியும் அவரது தாய் சிவகாமியும் வேண்டிக் கொண்டிருந்தனர். ஆனால், பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் முரளி மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார்.  இதைக் கண்ட சிவகாமி அவருக்கு ஆறுதல் சொல்லி வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. 

இதைத் தொடர்ந்து முரளியும், அவரது தாய் சிவகாமியும் இன்று மதியம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில்,  தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என அவர்கள் இருவரும் ஊர் முழுக்க சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஏமாற்றத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in