
சென்னையில் திடீரென மரம் முறிந்து விழுந்ததில் ஆட்டோவில் இருந்த மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வ்ள்ளுவர் கோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா(40). மாற்றுத்திறனாளி பெண்ணான இவர் நந்தனத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். மற்றநாள்கள் வீட்டிலும், வாரத்தில் இருநாள்கள் மட்டும் அலுவலகத்திலும் போய் வேலை செய்ய வேண்டும். இவர் வழக்கமாக வேலைக்கு ஆட்டோவில் சென்று திரும்புவது வழக்கம்.
சென்னை தேனாம்பேட்டை வி.என்.சாலையில் ஆட்டோவில் பணி முடிந்து இவர் திரும்பிக் கொண்டு இருக்கும்போது சாலையோரம் நின்ற மரம் ஒன்று ஆட்டோ மீது முறிந்து விழுந்தது. இதில் ஆட்டோவில் பின் சீட்டில் இருந்த சூர்யா ஆட்டோவிலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தார். ஓட்டுநர் சேகருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. விபத்தில் பலியான சூர்யாவின் உடல், மரம் அறுக்கும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மரத்தின் பாகங்கள் வெட்டி அகற்றப்பட்ட பின்பு மீட்கப்பட்டது.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிப் பெண் சாலையில் மரம் முறிந்து விழுந்து உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.