கட்டிடத்தொழிலாளி கொலையில் திடீர் திருப்பம்: தன்பாலின சேர்க்கைக்கு மறுத்ததால் கொன்றதாக பள்ளி மாணவன் உள்பட இருவர் கைது

கட்டிடத்தொழிலாளி கொலையில் திடீர் திருப்பம்: தன்பாலின சேர்க்கைக்கு மறுத்ததால் கொன்றதாக பள்ளி மாணவன் உள்பட இருவர் கைது

தன்பாலின சேர்க்கைக்கு மறுத்ததால் கட்டிடத்தொழிலாளியைக் கொன்று தண்டவாளத்தில் வீசியதாக பள்ளி மாணவன் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் ராஜ்குமார்(20). கட்டுமானத்தொழிலாளியான இவர் மஞ்சளாறு தண்டவாளத்தில் காயங்களுடன் அக்.30-ம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மயிலாடுதுறை ரயில்வே போலீஸார், ராஜ்குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமாரை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணையைத் தொடக்கினர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், மயிலாடுறை சித்தர்காடு தெற்குவீதியைச் சேர்ந்த கபிலன்(22), மகாதானபுரத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவனும் டூவீலரில் ராஜ்குமாரை அழைத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து ரயில்வே காவல் துறையிடம் ஒப்படைத்தனர். ராஜ்குமாரை எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது மின்கம்பிகளை திருடியதாக ராஜ்குமார் பழி சுமத்தியதால் அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்பட்டது. ஆனால், தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

மஞ்சளாறு தண்டவாளப் பகுதியில் கபிலனும், பள்ளி மாணவனும் இணைந்து ராஜ்குமாருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து தன்பாலின உறவுக்கு அழைத்துள்ளனர். இதற்கு ராஜ்குமார் எதிர்ப்பு தெரிவித்து அவர்களிடம் இருந்து தப்பியோடிள்ளார். ஆனால், அவரை விரட்டிப் பிடித்து பீர் பாட்டிலால் தலையிலும் தாக்கியதுடன், கற்களால் தாக்கி அவரைக் கொலை செய்துள்ளனர். அவரது உடலை தண்டவாளத்தில் வீசினால், ரயிலில் அடிபட்டு அவர் இறந்து போனார் என்று வழக்குப்பதிவு செய்யப்படும் என நினைத்து பிணத்தை அங்கு வீசியதும் விசாரணையில் தெரிய வந்தது. பாலியல் குற்றத்திற்காக இளைஞருடன் சேர்ந்து பள்ளி மாணவன் கொலையில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in