செல்போன் கடை ஊழியர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு; காவல் துறை அதிகாரி சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ

செல்போன் கடை ஊழியர் மீது  திடீர் துப்பாக்கிச்சூடு; காவல் துறை அதிகாரி சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ

செல்போன் கடை ஊழியர் மீது துப்பாக்கியால் சுட்ட காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் செல்போன் பழுது பார்க்கும் கடை உள்ளது. இந்தக்கடைக்கு காவல் துறை அதிகாரி ஒருவர் நேற்று வந்துள்ளார். அப்போது கடையில் செல்போன் பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல் துறை அதிகாரி தனது துப்பாக்கியை கவரில் இருந்து எடுத்து சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கியின் ட்ரிக்கர் அழுத்தப்பட்டது.

இதில் கடையில் வேலை பார்த்த இளைஞர் மீது குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. செல்போன் கடையில் நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, அந்த காவல் துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அமிர்தசரஸ் வடக்கு உதவி காவல் ஆணையர் வரீந்தர் சிங் இன்று கூறுகையில்," நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேரில் கண்ட சாட்சியின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், காயமடைந்த நபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என்று கூறினார்.

காவல் துறை அதிகாரி சுட்டது தற்செயல் நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் பெருகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in