இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக திடீர் முடிவு: பின்னணியில் நடப்பது என்ன?

இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக திடீர் முடிவு: பின்னணியில் நடப்பது என்ன?

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது. இதன் காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் மாளிகை போராட்டக்காரர்களால் தீக்கிரையானது.

இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இரண்டு மாதங்களுக்கு முன் பதவிபேற்றார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இன்னும் ஒன்றரை ஆண்டுகளாவது ஆகும் என்று சமீபத்தில் அவர் தெரிவித்தார். இதனால் ஆத்திரமும், ஏமாற்றமும் அடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை அதிபர் மாளிகை அருகே 9-ம் தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பாதுகாப்பு வளையங்களை மீறி அதிபர் மாளிகைக்குள் அவர்கள் நுழைந்தனர். அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனாலும், மக்கள் அதனையும் மீறி போராட்டம் நடத்தினர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதன் காரணமாக இலங்கையில் தற்போது அசாதாரணமான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இன்று அவரச ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அனைத்து கட்சிகளைக் கொண்ட ஆட்சி அமைப்பதற்கு உடன்பாடுஏ ற்பட்டவுடன், அந்த அரசிடம் தங்களது அமைச்சர் பதவிகளை ஒப்படைக்கத் தயார் என கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்த தகவலை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

திடீர் அறிவிப்பு

இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்திகள் குறித்து ஜனாதிபதி செயலகம் ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் கோத்தபய ராஜபக்சவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவித்த பின்னரே அவரால் வெளியிடப்படுகின்றன. எனனவே, சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே ஜனாதிபதியால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாகக் கருத வேண்டும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in