திடீர் மேகவெடிப்பு... கொட்டித்தீர்த்த கனமழை: அமர்நாத் யாத்ரீகர்களின் உயிரைக்குடித்த பெருவெள்ளம்!

திடீர் மேகவெடிப்பு... கொட்டித்தீர்த்த கனமழை: அமர்நாத் யாத்ரீகர்களின் உயிரைக்குடித்த பெருவெள்ளம்!

தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் புனித குகை கோவிலுக்கு அருகே நேற்று மாலை ஏற்பட்ட தீடீர் மேக வெடிப்பு காரணமாக உருவான பெருவெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பெருவெள்ளம் மற்றும் தொடர் கனமழை காரணமாக 15,000 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பஞ்சதர்னியில் உள்ள பாதுகாப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அமர்நாத் குகைக் கோயிலில் மேகவெடிப்பு பாதித்த பகுதியில் காணாமல் போனவர்களை இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் இரவு முழுவதும் மீட்புப் பணியைத் தொடர்ந்தனர்.

மீட்புப்பணிகள் குறித்து பேசிய தேசிய பேரிடர் மீட்புப்படை டிஜி அதுல் கர்வால், “ இந்த மேகவெடிப்பு வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர், சுமார் 40 பேரை காணவில்லை. நிலச்சரிவு இல்லாததால் மீட்பு பணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் மழை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 4 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, இந்திய ராணுவம், மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் சிஆர்பிஎப் ஆகியவையும் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது” என தெரிவித்தார்

மீட்புப்பணிகள் மற்றும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in