தமிழகம் முழுவதும் பள்ளி நேரம் திடீர் மாற்றம்: என்ன காரணம்?

தமிழகம் முழுவதும் பள்ளி நேரம் திடீர் மாற்றம்: என்ன காரணம்?

காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் இனி 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்வித்துறைக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார். மதுரையில் நேற்று காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 37 மாவட்டங்களில் இன்று தொடங்கப்படுகிறது. இத்திட்டங்களை அமைச்சர்கள், ஆட்சியர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைக்கின்றனர்.

மேலும் இத்திட்டத்தில் காலை 8.15 மணி முதல் 8 45 மணி வரை உணவு பரிமாறப்படுகிறது. இதனால் இனி 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் காலை 8 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in