இப்படி ஒரு கிரிக்கெட் பிளேயரா?: குவியும் பாராட்டுக்கள்

இப்படி ஒரு கிரிக்கெட் பிளேயரா?: குவியும் பாராட்டுக்கள்

தன்னை ஆட்டமிழக்கச் செய்த இந்திய பந்து வீச்சாளர் பும்ராவைப் பார்த்து ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் பேட்டில் கைதட்டி பாராட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்றிரவு நடைபெற்றது. கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் போட்டி பாதிக்கப்பட்டது. இறுதியாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அந்த அணி அணி 8 ஓவர் முடிவில் 90 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேத்யூ வேட் 43 ரன்களும், ஆரோன் பின்ச் 31 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணி 7.2 ஓவரில்4 விக்கெட் இழந்து 92 ரன்கள் எடுத்து வென்றது. கேப்டன் ரோகித் சர்மா 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் இரு அணிகளும் 1 -1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஜஸ்பிரிட் பும்ரா குணமடைந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கினார். இந்த போட்டியில் அவர் 2 ஓவர்கள் வீசி 23 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். தொடக்க வீரரான ஆரோன் பின்சை அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார். பும்ரா வீசிய அற்புதமான யார்க்கர் பந்துவீச்சால் பின்ச் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த நொடியே, பேட்டால் கைதட்டி பும்ராவைப் பாராட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாக கேப்டன் ஆரோன் பின்சின் செயலுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in