கேரளத்திற்கு கடத்தப்பட்ட மானியவிலை மண்ணெண்ணெய்: ஆட்டோவைச் சுற்றி வளைத்த போலீஸ்

மானிய விலை மண்ணெண்ணெய்
மானிய விலை மண்ணெண்ணெய்கேரளத்திற்கு கடத்தப்பட்ட மானியவிலை மண்ணெண்ணெய்: ஆட்டோவை சுற்றி வளைத்த போலீஸ்

கன்னியாகுமரியில் இருந்து கேரள பதிவெண் கொண்ட ஆட்டோவில் கேரளத்திற்கு கடத்தப்பட்ட மண்ணெண்ணெயை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கேரளப் பதிவெண் கொண்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிக முக்கியமானது கன்னியாகுமரி. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மீனவர்கள் பைபர் படகுகளுக்குப் பயன்படுத்தும்வகையில் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த மண்ணெண்ணையை மொத்தமாக சிலர் வாங்கி, கேரளத்திற்குக் கொண்டு செல்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கொல்லங்கோடு ஆய்வாளர் ரமா தலைமையிலான போலீஸார் தமிழக- கேரள எல்லையோர திருமன்னம் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகக் கேரளப் பதிவெண் கொண்ட பயணிகள் ஆட்டோ ஒன்று வந்தது. போலீஸாரைப் பார்த்ததும் ஆட்டோவை ஓட்டிவந்தவர் நடுவழியில் நிறுத்திவிட்டுத் தப்பியோடி விட்டார். இதனால் அந்த ஆட்டோவை போலீஸார் சோதனை செய்தனர். அதில் 25 கேன்களில் 875 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆட்டோவையும், மண்ணெண்ணையையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in