`நாடு முழுவதும் 81.35 கோடி பேருக்கு மானிய உணவு தானியம்'

மக்களவையில் ரவீந்திரநாத் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
`நாடு முழுவதும் 81.35 கோடி பேருக்கு மானிய உணவு தானியம்'

உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி கூறினார்.

மக்களவையில் இன்று அதிமுக எம்பியான ரவீந்திரநாத், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ், வீடற்ற, தங்குமிடமற்ற மற்றும் ஆதரவற்றோர் அனைவருக்கும் உணவு தானியங்கள் வழங்குவதை உறுதி செய்வதற்காக ரேஷன் கார்டுகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், பொது விநியோக அமைப்பிலிருந்து மானிய உணவு தானியங்களின் பலனைப் பெற அதிகபட்சமாக 81.35 கோடி நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. சட்டத்தின் கடமைகள் மற்றும் விதிகளின்படி, சட்டத்தின் கீழ் பயனாளிகளைச் சேர்ப்பதற்கும் விலக்குவதற்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட அளவுகோல்களின்படி அதிகபட்ச தகுதியான பயனாளிகள், குடும்பங்களைக் கண்டறிந்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி வழங்குவது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பொறுப்பாகும்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி அந்தந்த உச்சவரம்புகள் வரை அடையாளம் காணப்பட்ட நபர்கள், வீடு இல்லாதவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கு இதுவரை ரேஷன் கார்டுகள் இல்லை. இவர்களை அடையாளம் கண்டு அவர்களை சேர்ப்பதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in