வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார்

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார்

வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வின் காரணமாக சென்னயில் இன்று காலமானார். அவருக்கு வயது 94.

திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் 1928-ம் ஆண்டில் பிறந்த சுப்பு ஆறுமுகம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சுப்பையா பிள்ளை குழுவில் பங்கேற்று வில்லுப்பாட்டு பயின்றவர். இதன் பின் தனித்து கச்சேரிகள் செய்து புகழ் பெற்றார். இதன் காரணமாக வில்லிசை வேந்தர் என்று போற்றப்பட்டார்.

கடந்த 40 வருடங்களாக வில்லிசை பாட்டு கச்சேரிகளை நடத்தி வந்தார். மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இதிகாச கதைகளை வில்லுப்பாட்டின் மூலமாக எளியமுறையில் மக்களுக்குச் சொல்லி வந்தார். மேலும் காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, புத்தர் கதை, திலகர் கதை என்று ஏராளமான வில்லுப்பாட்டுகளை சுப்பு ஆறுமுகம் பாடியுள்ளார்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நடித்த 19 திரைப்படங்கள், நடிகர் நாகேஷ் நடித்த ் 60 திரைப்படங்களுக்கு சுப்பு ஆறுமுகம் நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார். கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதையும் அவர் பெற்றுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வயது முதிர்வின் காரணமாக சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் சுப்பபு ஆறுமுகம் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள், கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in