நீட் இல்லாமலேயே மருத்துவம் படிக்கலாம் - பிஎன்ஒய்எஸ் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

நீட் இல்லாமலேயே மருத்துவம் படிக்கலாம் - பிஎன்ஒய்எஸ் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

நீட் தேர்வு மதிப்பெண்கள் இல்லாமலேயே மருத்துவம் படிக்கக்கூடிய பிஎன்ஒய்எஸ் (Bachelor of Naturopathy and Yogic Sciences) எனப்படும் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிஎன்ஒய்எஸ் (Bachelor of Naturopathy and Yogic Sciences - BNYS) எனப்படும் இளங்கலை இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் படிப்பு ஐந்தரை வருடங்கள் படிக்கக்கூடியது. நான்கரை வருடங்கள் தியரி படிப்பையும், ஒரு வருடம் இண்டர்ன்ஷிப்பையும் இது உள்ளடக்கியது. மருந்தில்லா மருத்துவம் என்ற அடிப்படையில் இந்த படிப்பு அமைந்துள்ளது. முக்கியமாக இந்த படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண்களும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இப்படிப்புக்கான கவுன்சிலிங் நடக்கவுள்ளது.

பிஎன்ஒய்எஸ் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 10, 11, 12 தேதிகளில் அரும்பாக்கம் அண்ணா மருத்துவமனை வளாகத்தில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கவுன்சிலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் அரசு சார்பில், அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்திலுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 60 இடங்களும், செங்கல்பட்டில் உள்ள தேசிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ இன்ஸ்டியூட்டில் 100 இடங்களும் உள்ளது. மேலும் 17 தனியார் கல்லூரிகள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 19 கல்லூரிகளில் பிஎன்ஒய்எஸ் படிப்பு உள்ளது. இந்த கலந்தாய்வுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in