அமைச்சர் நிகழ்ச்சியில் தரையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்: வீடியோ எடுத்தவர்களைத் தடுத்த ஆசிரியர்களால் பரபரப்பு!

தரையில் அமர வைக்கப்பட்ட மாணவிகள்
தரையில் அமர வைக்கப்பட்ட மாணவிகள்அமைச்சர் நிகழ்ச்சியில் தரையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்: வீடியோ எடுத்தவர்களைத் தடுத்த ஆசிரியர்களால் பரபரப்பு!

நாகர்கோவிலில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகளைத் தரையில் அமர வைத்திருப்பதை வீடியோ எடுத்த செய்தியாளர்களிடம் ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா பேரணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது வருகை தாமதமானது.

இதையடுத்து பேரணியில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகள் கடும் வெயிலுக்கு மத்தியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். இதனை அங்கிருந்த செய்தியாளர்கள் படம் பிடித்தனர்.

இதனால் ஆவேசம் அடைந்த ஆசிரியர்கள், செய்தியாளர்களிடம் படம், வீடியோ எடுக்கக் கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தரையில் அமர வைக்கப்பட்டிருந்த மாணவ, மாணவிகளை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in