ஆற்றை கடந்து பாலத்தில் ஏறி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: ஆபத்தை உணராமல் பயணம்!

ஆற்றை கடந்து பாலத்தில் ஏறி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: ஆபத்தை உணராமல் பயணம்!

ஆற்றை கடந்து ஏணி மூலம் பாலத்தில் ஏறி மாணவ, மாணவிகள் ஆபத்தான நிலையில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் மழை நீர் இன்னும் வழியாததால் அந்தப் பகுதிக்கு இன்று விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் தண்ணீரில் நடந்து பாலத்தின் மேல் ஏறி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே கட்டி முடிக்கப்படாத பாலத்தால், ஆபத்தான முறையில் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி, ஏணி மூலம் பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. விடையூர் - கலியனூரை இணைக்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, மேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். ஆற்றில் இறங்கி ஏணி மூலம் பாலத்தில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in