ஈசிஆரில் சொகுசு வீடுகளை குறிவைத்த மாணவர்கள்: மிரண்டு போன போலீஸ்

ஈசிஆரில் சொகுசு வீடுகளை குறிவைத்த மாணவர்கள்: மிரண்டு போன போலீஸ்

ஈசிஆர் சாலையில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் சந்தேகத்து இடமான வகையில் கும்பல் ஒன்று சுற்றித் திரிவதாக கானத்தூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது 12-ம் வகுப்பு மாணவன், கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஈசிஆர் சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவரை சிறார் சீர்திருத்த பள்ளிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட முயன்ற சம்பவம் பெற்றோர்கள், காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in