பதற்றத்துடன் மாணவர்கள் தேர்வை எதிர்க்கொள்ளக்கூடாது: நடிகர் தாமு அட்வைஸ்

 நடிகர் தாமு
நடிகர் தாமுபதற்றத்துடன் மாணவர்கள் தேர்வை எதிர்க்கொள்ளக்கூடாது: நடிகர் தாமு அட்வைஸ்

பதற்றத்துடன் மாணவர்கள் தேர்வை எதிர்க்கொள்ளக்கூடாது எனநடிகர் தாமு தெரிவித்துள்ளார்.

நடிகர் தாமு, விஜய் நடிப்பில் வெளியான ’கில்லி’ படத்தில் ஓட்டேரி நரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைவிற்கு பின் அவரது பெயரில் அறக்கட்டளைத் தொடங்கி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகளின் பதற்றத்தைப் போக்கும் வகையில் அவர்களை உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," அப்துல் கலாம் அய்யா மறைவிற்கு பின் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். மாணவர்கள் வளரும் சமுதாயம் அவர்கள் எந்தவிதமான பதற்றத்துடன் தேர்வை எதிர்க்கொள்ளக் கூடாது.

பொதுவாகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு எல்லாமே இலவசமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியவில்லை. தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் எல்லாம் வாங்கித்தர வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அரசு பள்ளியைப் பொறுத்தவரை அரசாங்கமே பெற்றோராக மாறியுள்ளது. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள் அதனால் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்’’ என்றார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in