பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

குடிநீர், கழிவறை, சேதமடைந்தக் கட்டிடங்களைச் செய்ய வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரக் கோரி ’சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பச்சையப்பன் கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குப் போதிய அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்றவை இல்லை என மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.

ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கல்லூரி நிர்வாகத்தைக் கண்டிக்கும் விதமாகவும், அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரியும் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அரங்கம் மற்றும் அண்ணா அரங்கம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு அல்லாமல் தனியார் மற்றும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கல்லூரி மற்றும் விடுதியில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால், அதனைப் புதுப்பிக்க கல்லூரி நிர்வாகம் மறுக்கிறது. பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் அனைவருமே தவறான மாணவர்களாகச் சித்தரிக்க முயல்வதாகவும் அந்த நிலை மாற வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in