இந்த 4 மாவட்ட மாணவர்கள் கட்டாயம் சனிக்கிழமை பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக அரசு திடீர் உத்தரவு

இந்த 4 மாவட்ட மாணவர்கள் கட்டாயம்  சனிக்கிழமை பள்ளிக்கு வரவேண்டும்:  தமிழக அரசு திடீர் உத்தரவு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமையன்று ( ஆக.27) பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளின் தொடக்க விழா கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதையொட்டி, ஜூலை 28-ம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 27-ம் தேதியன்று வேலை நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஜூலை 28-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஆக.27-ம் தேதி சனிக்கிழமையன்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in