ஓடும் பேருந்து மேற்கூரையில் நின்று மாணவர்கள் அட்டகாசம்: அதிர்ச்சி வீடியோ

ஓடும் பேருந்து மேற்கூரையில் நின்று மாணவர்கள் அட்டகாசம்: அதிர்ச்சி வீடியோ

ஓடும் பேருந்தில் மேற்கூரையில் நின்று ஆபத்தான முறையில் மாணவர்கள், இளைஞர்கள் அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சென்னை பிராட்வேயில் இருந்து அண்ணா நகர் மேற்கு வரை செல்லும் மாநகர பேருந்து (தடம் 15 எண்) நேற்று மாலை கோயம்பேடு வழியாக சென்று கொண்டிருந்தது. கோயம்பேடு மேம்பாலத்தில் செல்லும் போது பேருந்தில் பயணித்த சில பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தின் மேற்கூரையிலும், பக்கவாட்டிலும் ஏறி மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். அதிலும் ஒரு இளைஞர் பேருந்தின் மேற்கூரையில் நின்று கொண்டு பெண்களிடம் "மான் கராத்தே" போஸ் கொடுத்து கெத்து காட்டியுள்ளார். இதை பின்புறமாக வந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருவதால், போலீஸார் அட்டகாசம் செய்த இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் தொடர்ந்து அபாயகரமாக பயணம் செய்யும் வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது. இவர்களை பிடித்து போலீஸார் கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே பள்ளி, கல்லூரி மாணவர்கள் இது போன்ற விபரீத விளையாட்டில் ஈடுபடமாட்டார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in