பறக்கும் ரயிலில் சாகசம் செய்யும் மாணவர்கள்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

பறக்கும் ரயிலில் சாகசம் செய்யும் மாணவர்கள்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

சென்னை பறக்கும் ரயிலின் வெளியே தொங்கியபடியும், ரயிலின் மீது ஏறியும் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் கல்வி நிலையங்களுக்கு பேருந்து மற்றும் மின்சார ரயில்களில் பயணம் செய்கின்றனர். அப்போது சில மாணவர்கள் பேருந்து ஜன்னல் கம்பிகளை தொங்கியபடி தரையில் ஸ்கேட்டிங் செய்து கொண்டே ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதே போல மின்சார ரயிலிலும் படிக்கட்டில் தொங்குவது, ரயிலில் ஏறி ஆட்டம் போடுவது போன்ற ஆபத்தான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் நேற்று முன்தினம் ரயிலில், இளைஞர்கள் சில ரயிலின் மேல் ஏறிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவர்கள் ரயிலின் வெளியே தொங்கியபடியும், ரயில் மீது ஏறியும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வகையில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in