நான் டெபுடி ரெஜிஸ்டர் பேசுறேன்; போனில் பேசி பணம் பறிக்கும் மர்மநபர்: பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி

நான் டெபுடி ரெஜிஸ்டர் பேசுறேன்; போனில் பேசி பணம் பறிக்கும் மர்மநபர்: பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயின்ற மாணவர்களிடம் பட்டப்படிப்புக்கான சான்றிதழ் பெற்றுத் தருவதாக கூறி பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பட்டப்ப்படிப்பை முடித்த மாணவர்கள் சிலர் இன்னும் அதற்கான சான்றிதழைப் பெறாமல் உள்ளனர். இந்த மாணவர்களைத் தொடர்பு கொண்ட செல்வம் என்பவர் பட்டப்படிப்பிற்கான சான்றிதழைப் பெற்றுத் தருவதாகவும், அதற்காக ரூ. 1,000 முதல் 5,000 வரை பணம் பெற்றுள்ளார். ஆனால், பணம் கொடுத்தும் சான்றிதழ் வழங்கப்படாததால் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில், அந்த மாணவர்களுக்கு தொடர்பு கொண்ட நபர் குறித்த ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், செல்வம் என்பவர் தன்னை டெபுடி ரெஜிஸ்டர்(Deputy Registrar) பேசுவதாக கூறி, "தங்களது கல்விக்கட்டணம் செலுத்தப்படாமல் இருப்பதால்தான் சான்றிதழ் வழங்கப்படவில்லை" என்று கூறுகிறார். அதுமட்டுமின்றி, "தாங்களாக பல்கலைக்கழகத்தில் கட்டணத்தைச் செலுத்த முடியாது. கிட்டத்தட்ட 60 நபர்களுக்கு இதுபோன்று கட்டணம் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவர்களின் தொலைபேசி எண் எப்படி கிடைத்தது? தொலைபேசியில் தொடர்பு கொண்ட செல்வம் என்பவர் யார்? பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்கள் யாரேனும் இதற்கு உதவுகின்றனரா என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in