நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய காதலி: கொந்தளித்த முன்னாள் காதலன்: இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய காதலி: கொந்தளித்த முன்னாள் காதலன்: இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

தன் நண்பர்கள், தோழிகளோடு பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் திடீரென வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சேர்ந்த மாணவி தனியார் கலை, அறிவியல் கல்லூரி ஒன்றில் பி.ஏ மூன்றாமாண்டு பயின்று வருகிறார். இவரும் குளச்சல் பகுதியைச் சேர்ந்த அஜின் என்ற வாலிபரும் கடந்த ஆறு ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். பள்ளிப் பருவத்தில் இருந்தே தொடங்கிய இவர்களின் காதல், கருத்து வேறுபாட்டால் முடிவுக்கு வந்தது.

தன்னோடு காதலை முறித்துக் கொண்டதால் கோபம் ஆன அஜின் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு காதல் தொல்லைக் கொடுத்து வந்தார். அந்த மாணவி அதைப் பொருட்படுத்தவே இல்லை. இந்நிலையில்தான், அந்த மாணவிக்கு பிறந்தநாள் வந்தது. இதற்காக தன் உறவினர் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் தன் ஆண் நண்பர்கள், தோழிகளை அழைத்து விருந்து கொடுத்தார். இந்நிகழ்வுக்கும் அஜின் அழைக்கப்படவில்லை. இதனால் தன் முன்னாள் காதலி மீது கோபத்தில் இருந்த அஜின், அருகில் இருந்த தென்னை மரத்தில் சர,சரவென ஏறி வீட்டுக்குள் குதித்தார்.

மரக்கட்டையால் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்களையும் அஜின் தாக்கிவிரட்டினார். மேலும் தன் முன்னாள் காதலியின் தலையிலும் கட்டையால் அடித்தார். இதனைத் தொடர்ந்து தாக்கப்பட்ட முன்னாள் காதலி, குளச்சல் உடையார்விளை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அஜின் தலைமறைவாகிவிட்டார். மாணவி கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த குளச்சல் போலீஸார் தலைமறைவாக இருக்கும் அஜினைத் தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in