மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

மாணவி சத்யா ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா நேற்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரால் ரயிலில் தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் வரும் 28-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை பதற வைத்துள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கடந்த 5 ஆண்டுகளாக மாணவி சத்யாவும், சதீஷும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே காதல் விவகாரம் சத்யாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளதையடுத்து சத்யாவை கண்டித்துள்ளனர். இதனால் சதீஷ் உடனான தொடர்பை சத்யா துண்டித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சதீஷ் பலமுறை பேச முயற்சித்தும் சத்யா பேசாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சதீஷ் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில்தான் பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை சந்தித்து பேச முயன்றுள்ளார் சதீஷ். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்துள்ளது. அந்த நேரத்தில் வந்த மின்சார ரயிலில் சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை வழக்கை ரயில்வே காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு இன்று உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in