பிளஸ் 2 மாணவி மூன்று மாத கர்ப்பம்: வெல்டிங் தொழிலாளி போக்சோவில் கைது

பிளஸ் 2 மாணவி  மூன்று மாத கர்ப்பம்: வெல்டிங் தொழிலாளி போக்சோவில் கைது

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெல்டிங் பட்டறை தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள்(16) அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியில் வெல்டிங் பட்டறையில் வேலைசெய்யும் பிரதீப் (23) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாற, இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

அப்போது, அந்த மாணவியைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அவரின் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது மாணவியின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மூன்றுமாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து காரணத்தை கேட்ட போது பிரதீப்பால் தான் கர்ப்பமானதாக மாணவி கூறியுள்ளார்.

இதையடுத்து பிரதீப் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து பிரதீப் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in