கல்லூரி வகுப்பறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்த மாணவன்: காரணம் என்ன?

தற்கொலை செய்த மாணவன்.
தற்கொலை செய்த மாணவன்.கல்லூரி வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த மாணவன்: காரணம் என்ன?

தெலங்கானாவில் கல்லூரி மாணவன் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வகுப்பறையில் நேற்று இரவு நகுலா சாத்விக் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வகுப்பறையில் இருந்த மின்விசிறியில் நைலான் கயிறு மூலம் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் கொடுமையால் தான் மாணவன் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் நான்கு கல்லூரி மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த பிரீத்தி என்ற மாணவி சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். நிஜாமாபாத் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி தாசரி ஹர்ஷா விடுதி அறையில் கடந்த சனிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார். இதே போல தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி, உறவினர் வீட்டில் மர்மமான முறையில் மரணமைடைந்தார். இந்த நிலையில், நேற்று இரவு நகுலா சாத்விக் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தொடரும் வகுப்பறை மரணங்களைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in