டியூசன் சென்ற மாணவியை புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் வெறிச்செயல்

டியூசன் சென்ற மாணவியை புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் வெறிச்செயல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டியூசன் சென்ற மாணவியை ஆட்டோ ஓட்டுநரும், அவரது நண்பரும் கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததுடன் தலையில் அடித்து சாலையில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் விபூடி காண்ட் பகுதியில், 18 வயது மாணவி ஆட்டோவில் டியூசன் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் விடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு ஆண் ஆட்டோவை மறித்து ஏறியுள்ளார். அவர் ஆட்டோ ஓட்டுநரின் நண்பர் என்று கூறப்படுகிறது. சுஷாந்த் கோல்ஃப் சிட்டி அருகே ஆட்டோவை நிறுத்தி அந்த மாணவியை ஆட்டோ ஓட்டுநரும், அவரது நண்பரும் புதருக்குள் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும், மாணவியின் தலையில் தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார். இந்த நிலையில் மாணவியை ஹஸ்தியா சந்திப்பு சாலையில் வீசிவிட்டு ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும் தப்பி விட்டனர்.

இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள அமர் உஜாலா செய்தி நிறுவனம், பாதிக்கப்பட்ட மாணவி, மூன்று காவல் நிலையங்களுக்குச் சென்றும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது. இதுகுறித்த தகவல் நேற்று மாலை சமூகவலைதளங்களில் பரவியது. இதன் பின்பே போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக ஐபிசி 342,376-டி, 323,392 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் நேற்று மாலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் பின்பே பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ சிகிச்சைக்காக ஹஸ்ரத்கஞ்ச் ஜல்காரி பாய் மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in