காதலை ஏற்க மாணவி மறுப்பு; பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வாலிபர்: ஒருதலை காதலால் நடந்த விபரீதம்

காதலை ஏற்க மாணவி மறுப்பு; பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வாலிபர்: ஒருதலை காதலால் நடந்த விபரீதம்

ஜார்க்கண்ட் மாநிலம், குர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அங்கீதா குமாரி. இவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் என்ற வாலிபர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காதலை மாணவி ஏற்க மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த வாலிபர், மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

கைதான வாலிபர் ஷாருக்
கைதான வாலிபர் ஷாருக்

இதில் பலத்த காயம் அடைந்த மாணவி அங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே மாணவி எரித்துக் கொன்ற வாலிபர் ஷாருக்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஒருதலை காதலால் மாணவி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in