2 நாட்களாக குழப்பத்தில் இருந்த போலீஸ்: மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவர் கைது!

2 நாட்களாக குழப்பத்தில் இருந்த போலீஸ்: மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவர் கைது!

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் இரு நாட்கள் விசாரணைக்கு பின்னர்  இன்று கைது செய்யப்பட்டார். 

சிதம்பரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள  நிழற்குடையில் அரசு பள்ளி மாணவிக்கு தனியார்  பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதையடுத்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய  போலீஸார்  அந்த மாணவர், மாணவி மற்றும்  இருதரப்பு பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு நேற்று  வரழைத்து  விசாரணை செய்தனர். 

திருமணம் செய்ததை மாணவர், மாணவி இருவரும் உறுதி செய்தனர். இதில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில் போலீஸாருக்கு குழப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால்  இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு காத்திருந்தனர். அவர்களிடமிருந்து இரவு வரை  எந்த உத்தரவும் வராத நிலையில்  எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டு இரு தரப்பினரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். இந்த நிலையில் இன்று மாணவனை மீண்டும் காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீஸார்,  மாணவனை சிறார் திருமண சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுவர் சீர்நோக்கு இல்லத்திற்கு மாணவர் அனுப்பி வைக்கப்படுவார் என தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in