பிளஸ் 2 தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்து மாணவி சாதனை!

ஆசிரியர்களுடன் மாணவி நந்தினி
ஆசிரியர்களுடன் மாணவி நந்தினி

பிளஸ் 2 தேர்வில் 600/600 முழு மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி நந்தினி வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். தமிழ் பாடத் தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவிகளில் ஒருவர் நந்தினி என்பது கூடுதல் சிறப்பு.

 நந்தினி பெற்ற முழு மதிப்பெண் விவரம்
நந்தினி பெற்ற முழு மதிப்பெண் விவரம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் 94% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

திண்டுக்கல் நாகல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் கூலித் தொழிலாளியான இவரது மூத்த மகள் நந்தினி. அந்தப்பகுதியில் உள்ள அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். வணிகவியல் பாடப்பிரிவைத் தேர்வு செய்து படித்த நந்தினி, இன்று வெளியான பிளஸ் 2 தேர்வில் தமிழ் உட்பட அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் சதம் எடுத்து 600/600 என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

’’தந்தையின் கடினமான உழைப்பும் அம்மாவின் அரவணைப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், படிப்பையே எனது முழு சொத்தாக நான் நினைத்தாலும் இந்த சாதனை எனக்கு சாத்தியமானது’’ என மாணவி நந்தினி செய்தியாளர்களிடம் நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

மாணவி நந்தினி
மாணவி நந்தினிபிளஸ் 2 தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்து மாணவி சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in