`உங்கள் விவரம் சேகரிக்கப்படுகிறது; பொய் செய்திகளை பரப்பினால் இதுதான் நடக்கும்'- எச்சரிக்கும் தமிழக டிஜிபி!

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு பொய் செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக டிஜிபி எச்சரிக்கை!

’’அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொய் செய்தி பரப்புவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்" என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவியதன் காரணமாக தங்களது சொந்த மாநிலங்களுக்கு அவர்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, ஹோலி பண்டிகையை கொண்டாடவே அவர்கள் சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு செல்வதாக தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘’வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சில விஷமிகள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்தி பரப்பியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது; பொய் செய்தி பரப்புவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

தமிழக டிஜிபி அறிக்கை
தமிழக டிஜிபி அறிக்கைபொய் செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக டிஜிபி எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in