`ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்'- டிஜிபி எச்சரிக்கை கடிதம்

`ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்'- டிஜிபி எச்சரிக்கை கடிதம்

கல்வி நிறுவனங்களில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களைக் கல்லூரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில், பாகாயம் போலீஸார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கொள்காட்டி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட எஸ்.பிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ராகிங் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாமதிக்காமல் விரைவாக முடிக்க வேண்டும் எனவும், ராகிங் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க, அது தொடர்பான புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in