சஸ்பெண்ட்டால் மனஅழுத்தம்; கோபித்துக் கொண்டு சென்ற மனைவி: உயிரை மாய்த்த மின்வாரிய ஊழியர்!

சஸ்பெண்ட்டால் மனஅழுத்தம்; கோபித்துக் கொண்டு சென்ற மனைவி: உயிரை மாய்த்த மின்வாரிய ஊழியர்!

திருநெல்வேலியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(50) இவரது வீட்டில் இருந்து இன்று பயங்கர துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணேசன் தூக்கில் சடலமாகக் கிடந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து நான்கு நாள்களுக்கு மேல் ஆகியிருந்தது.

போலீஸார் இதுகுறித்து விசாரித்ததில், ‘மின்வாரிய ஊழியரான கணேசன் உயர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதனால் கணேசன் கடும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக தினமும் குடித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அழுத்தத்தில் மனைவியிடம் தொடர்ந்து சண்டைபோட்டு வந்தார். இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு அவர் தாயாரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த மன வருத்தத்திலேயே கணேசன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in