சென்னையை மிரட்டும் புயல் : 7 விமானங்கள் ரத்து

சென்னையை மிரட்டும் புயல் :  7 விமானங்கள் ரத்து

'மேன்டூஸ்' புயல் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

'மேன்டூஸ்' புயல் காரணமாக சென்னையில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் சென்னையை நெருங்குவதால் பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணிக்கு இலங்கையின் கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:25 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து கடப்பா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 9:15 மணிக்கு மும்பை செல்லும் ஸ்பைஜெட் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் இலங்கையில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை 9:35 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5:50 மணிக்கு கடப்பாவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்று, மழையின் வேகத்தை பொறுத்தும், பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் அல்லது பயண நேரம் மாற்றியமைக்கலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'மேன்டூஸ்' புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து சேவை பாதித்தால் விமானங்களைத் தரையிறக்க ஐதராபாத், பெங்களூரூ விமான நிலையங்களில் கூடுதல் நடைமேடை ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க விமான நிலைய ஆணையகம் அறிவுறுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in