காற்றழுத்த தாழ்வு நிலையால் கனமழை: பாம்பனில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் கனமழை: பாம்பனில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் மழை விட்டு, விட்டுப் பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை தொடர்கிறது. காலையில் துவங்கிய மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த மாணவ, மாணவியருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து மீனவர்கள் கடந்த மூன்று தினங்களாக கடலுக்குச் செல்லவில்லை. நாளை (பிப்.3) வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனால் ராமேஸ்வரம், மண்டபம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட கடற்பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையை நோக்கி நகர்ந்ததால்,பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கடநத 24 மணி நேரத்தில் 118.5 மி.மீ ராமேஸ்வரத்தில் 20.2 மி.மீ., மழை பெய்துள்ளது. வானம் தொடர்ந்து மேக மூட்டமாக காணப்படுவதுடன் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in