நிலக்கரி தட்டுப்பாடு - தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 2 யூனிட்களில் மின்உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு - தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 2 யூனிட்களில் மின்உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் பற்றாக்குறை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1வது மற்றும் 2வது யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்தட்டுப்பாடு உருவாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பழைமையான அனல் மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல் மின் நிலையமும் ஒன்றாகும். நிலக்கரி அடிப்படையிலான இந்த மின்நிலையம் கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in