வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; கண்ணாடிகள் உடைப்பு: சென்னை சென்ட்ரலில் பயணிகள் அதிர்ச்சி

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; கண்ணாடிகள் உடைப்பு: சென்னை சென்ட்ரலில் பயணிகள் அதிர்ச்சி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் விரைவு ரயில் இன்று காலை மைசூர் செல்வதற்காக அதிகாலை 4.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் கேரேஜில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் ரயிலில் ஏறியபோது பெட்டியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, உள்ளே கற்கள் சிதறி கிடப்பதை கண்டு உடனே சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புபடையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலையில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in